ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க இணைந்த ஆட்சி நாட்டை தோல்விக்கு இட்டுச் செல்கின்றது

தவிர்க்க முடியாத வகையில் மூன்றாவது சக்தியின் தேவையும் உணரப்பட்டுள்ளது

– லத்தீப் பாரூக் (Courtesy Author) 
Cartoons added by TW from internet
கடந்த ஆட்சியில் குற்றச் செயல்களிலும் ஊழல், மோசடி, வீண் விரயம் என்பனவற்றிலும் ஈடுபட்டு நாட்டின் செல்வத்தை பாரிய அளவில் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என்று நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியை இன்று வரை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டது. இது நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2015 ஜனவரி 8ல் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் ஆர்வத்தோடு இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். நாட்டின் செல்வத்தை சூறையாடியவர்களை தண்டிப்போம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் மேடைகளில் முழங்கியதை மக்கள் முழுமையாக நம்பி இந்த அரசுக்கு வாக்களித்தனர்.

ஆனால் இந்த அரசோ மக்களின் நம்பிக்கைகளை சிதறடித்து அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, பாரிய அளவில் ஊழல் வீண்விரயம் என்பனவற்றை புரிந்து விட்டு வெள்ளை ஆடையுடனும் கோட் சூட்டுடனும் இன்னமும் வலம் வரும் ஊழல் பேர்வழிகளை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சிலரது வெளிநாட்டு பயணங்கள் இன்னமும் அரச அனுசரணையின் கீழ் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.ADA-Cartoon-18
நாட்டு மக்கள் செய்வதறியாத மனநிலையில் தவிக்கின்றனர். மூன்றாவது அரசியல் சக்தி ஒன்றின் தேவை குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஐ.தே.கவும், ஸ்ரீ.ல.சு.கயும் தான் சுதந்திரம் முதல் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இதன் விளைவு உலகில் மிக மோசமாக முகாமைத்துவம் செய்யப்பட்ட ஒரு நாடு என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினதும் குறுகிய நோக்கு கொண்ட இனவாத கொள்கைகள் இந்த நாட்டுக்கு அழிவை தவிர வேறு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். இதை தற்போது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
உதாரணத்துக்கு சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இலங்கை உலகில் மிகவும் ஸ்திரமான நாடுகளில் ஒன்றாகக் காணப்பட்டது. மூன்றாம் உலகின் முன்மாதிரி நாடாக வர்ணிக்கப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திர நிலை இலங்கையில் காணப்பட்டது. தேவையான அளவு வெளிநாட்டு ஒதுக்குகள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி முறை, இன நல்லிணக்கம், சமாதானம் என எல்லாமே சிற்ப்பாகக் காணப்பட்டன.
எந்தவிதமான அச்சமும் இன்றி ஒருவர் மாத்தறை முதல் யாழ்ப்பாணம் வரை நடந்து சென்று வரக் கூடிய காலம் அது. ஒருவருக்கொருவர் எந்த பேதமும் இன்றி உணவு மற்றும் பானங்களைக் கூட பரிமாறிக் கொண்டு மனிதாபிமானத்தோடு மனித குல விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்த காலம் அது.
அரசியல் யாப்பில் எல்லோரது உரிமைகளுக்கும் சிறப்புரிமைகளுக்கும் உரிய இடமளிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மற்றவரது சமய கலாசார விழுமியங்களை மதித்தனர். அரசியல்வாதிகளுக்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் சமூகத்தில் நல்ல மரியாதை காணப்பட்டது. ஊழல் மோசடி என்பன பெரும்பாலும் அறியப்படாத விடயங்களாக இருந்தன.Image result for corruption cartoons
சுதந்திரமான பொலிஸ{ம் நீதித்துறையும் நாட்டில் காணப்பட்டன. சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கி நகரக் கூடிய சாத்தியங்கள் அனைத்தும் பெற்ற ஆசீர்வதிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இனவாத சிந்தனைகளுக்கு அப்பால் பட்டு நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய தூரநோக்கு மிக்க ஒரு தலைவரை எமது பெரும்பான்மை சமூகத்துக்குள் இருந்து இனம் கண்டு கொள்ள நாடு தவறிவிட்டது.
இதன் விளைவாக சுதந்திரமடைந்து சுமார் ஏழு தசாப்தங்கள் ஆகியும் கூட இன்றும் உலகில் மிகவும் மோசமாக முகாமைத்துவம் செய்யப்படும் நாடாகத் தான் இலங்கை காணப்படுகின்றது.
இந்த நிலைக்கு யார் பொறுப்பு? இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளினதும் இனவாத கொள்கைகள் தான் இதற்கு மூல காரணம். அந்த கொள்கைகள் தான் நாட்டுக்கு அழிவை கொண்டு வந்தன. அவை தான் இந்த நாட்டை ஆசியாவின் மிக மோசமான கொலைகளமாகவும் மாற்றின. 1930களிலேயே இந்த நாட்டில் இனவாத அரசியல் தொடங்கிவிட்டது. தமது சுயநல அரசியல் நலன்களுக்காக சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்களவர் நலன் கொள்கைகளை பிரசாரம் செய்யத் தொடங்கினர்
1930களில் இடம்பெற்ற அரசுப் பேரவை தேர்தல்களின் போது காணி மற்றும் காணிக் குடியிருப்புக்கள் அமைச்சர் என்ற வகையில் டி.எஸ்.சேனநாயக்க பொலன்னருவை, பதவிய. இங்கினியாகல மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய இடங்களான கிழக்கு மாகாணத்திலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவத் தொடங்கினார். இவ்வாறுதான் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடங்கப்பட்டு இன்று வரை நீடித்து இந்த நாட்டை சீரழிவுக்கு உட்படுத்தி வருகின்றது.
இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களை நிராகரித்து இது ஒரு சிங்கள் பௌத்த நாடு என்றும் ஒரு பிரிவினர் கோஷமிடத் தொடங்கினர். தாங்கள் இரண்டாம்தர பிரஜைகளாக மதிக்கப்படுவதை விரும்பாத சிறுபான்மை இன மக்கள் தமக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் நாட்டு நிர்வாகத்தில் தாங்களும் சம பங்கு வகிக்க வேண்டும் எனவும் தமது விதியை தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கினர்.
சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான விதைகள் இவ்வாறு தான் விதைக்கப்பட்டன. இன்று அது ஒரு பாரிய விருட்சமாக வளர்ந்து காணப்படுகின்றது.
இந்த அரசியல்வாதிகளின் இனவாத சிந்தனைப் போக்கை நன்கு புரிந்து கொண்ட பிரிட்டிஷ் காலணித்துவ அரசு சோல்பரி அரசியல் யாப்பில் ஒரு விஷேட பிரிவை இணைத்துக் கொண்டது. அந்த பிரிவு 29யு ஆகும். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான் ஒரு பிரிவாக இது காணப்பட்டது. எவ்வாறாயினும் சுதந்திரத்துக்குப் பின் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பெரும்பான்மை சமூகத்தின் நலன்களையே மீண்டும் மீண்டும் பாதுகாத்தன. சிறுபான்மையினரின் உரிமைகளை அவை தொடர்ந்தும் நிராகரித்தன.
சில சிங்கள தலைவர்கள் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இனவாதத்துக்கு தூபமிடுவதில் வெளிப்படையாகவும் செயற்பட்டு வந்துள்ளனர். இலங்கையின் தேசிய வாதத்தோடும் பௌத்தத்தோடும் இவர்கள் தமது இனவாதத்தை தாராளமாகக் கலந்து வருகின்றனர். இந்த இனவாத நிகழ்ச்சி நிரலை அவர்கள் மிகக் கொடூரமாக அமுல் செய்தும் வருகின்றனர். நாட்டில் இரத்த ஆறு ஓட இது வழியமைக்கும் என்ற அடிப்படை அறிவு இன்றியே அவர்கள் இதை செய்து வருகின்றனர்.
சிங்களவர்களின் மனோநிலையைப் பயன்படுத்தி சட்டவாக்க சபையின் உறுப்பினராக இருந்த ளு.று.சு.னு பண்டாரநாயக்க 24 மணி நேரத்தில் சிங்கள மகா சபையைத் தோற்றுவித்தார்.இந்தச் செயற்பாடானது பிரதான அரசியல் நீரோட்டத்தில் இருந்து சிங்கள மக்களைப் பிரித்தது.
ஜே.ஆர். ஜயவர்தன ஐக்கிய தேசியக் கட்சி வருடாந்த மாநாட்டில் சிங்கள மட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டார். 24 மணிநேரத்தில் சிங்கள மட்டும் என்ற அழைப்பை பண்டாரநாயக்க விடுத்தார். அதன் மூலம் இனவாத சுலோகங்களைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் தேர்தலில் போட்டியிட்டனர். அரசியல்வாதிகள் சிங்களப் பேரினவாதத்தை தொடர்ந்தும் தூண்டி வந்தனர். தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து மரணங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினர்.
எவ்வாறாயினும் பண்டாரநாயக்க தனது இனவாத அரசியலின் விளைவுகளை மிக விரைவில் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. பண்டா செல்வா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அந்த தீய விளைவுகளை கட்டுப்படுத்தும் சில முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் அந்த நிலையிலும் கூட இனவாத அரசியலின் விளைவுகளைப் புரிந்து னொள்ளத் தவறிய பல அரசியல் வாதிகள் இருந்தனர். அவர்கள் எதைப்பற்றியும் கவலைபடவில்லை.
எல்லா அரசாங்கங்களினதும் கூறிய பார்வை அடுத்த தேர்தலின் மீதே பதிந்திருந்தது. ஒன்றில் இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது அல்லது புதிதாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது தான் அவர்களின் இலக்காக இருந்தது. அதிகளவு வாக்குகளை கைப்பற்ற பெரும்பான்மை சமூகத்தை ஒரு வகை உணர்வுகள் தூண்டப்பட்ட நிலையில் வைத்திருப்பதையே அவை தமது பிரதான தேர்தல் மூலோபாயமாகக்; கையாண்டு வந்தன.
விளைவுகளை உணர்ந்து கொள்ளாமலேயே இந்த நிலைமை தொடரப்பட்டது. 1970ல் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகம் செய்த குடியரசு அரசியல் யாப்பில் சோல்பரி அரசியல் யாப்பில் இருந்த 29யு பிரிவை நீக்கினார். பௌத்த மதத்துக்கு அதன் மூலம் பிரதான இடமளிக்கப்பட்டது. இதன் விளைவாக எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (வுருடுகு) என்ற பெயரில் ஒன்றிணைந்தன. சம உரிமைக்காக அவை குரல் கொடுக்கத் தொடங்கின.
இதற்கு மேலும் தூபமிடும் வகையில் ஜே.ஆரின் 1978இன் கடும்போக்கு அரசியல் யாப்பு ஜனநாயக ரீதியாத் தெரிவு செய்யப்படும் சர்வாதிகார அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை பதவியில் அமர்த்தியது. அவர் சிறுபான்மையினரின் குரல்களை நசுக்கி அவர்களை நிர்க்கதி நிலைக்கு கொண்டு வந்தார். 1983ல் அவரது கட்சி காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கிக் கொன்றும் எரித்தும் நாசம்புரிந்தனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் தீக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிராக மிக நேர்த்தியான முறையில் திட்டமிடப்பட்டு இந்த வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன.
இதன் விளைவாகத்தான் தமிழ் ஆயுதப் போராட்டம் தலைதூக்கியது. தமிழ் ஆயத பாணிகளுக்குத் தேவையான ஆயுதம் பயிற்சி பணம் என்பனவற்றை இந்தியா வழங்கியது. உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதிகள் உருவாக இது வழிவகுத்தது. அவர்கள் காலப்போக்கில் நாட்டையே ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்தனர். சக்தி மிக்க தமிழ் புலம் பெயர் சமூகம் உருவாகவும் இதுவே காரணமாயிற்று.
நாடு முழவதும் மரணங்களும் அழிவுகளும் நீடித்தன. பொருளாதாரம் சீர்குலைந்தது. மக்கள் அச்சத்தோடும் நிச்சயமற்ற நிலையிலும் வாழும் நிலை ஏற்பட்டது. காலையில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆண்களும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் மீண்டும் உயிருடன் திரும்பி வருவார்களா என பெண்கள் அன்றாடம் ஏங்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியேற அஞ்சிய ஒரு காலம் உருவாக்கப்பட்டது.
மக்கள் இவ்வளவு இன்னல்களையும் மன உளைச்சல்களையும் அனுபவித்த அதேவேளை அரசியல்வாதிகள் ஆயுத விற்பனையில் கிடைக்கும் கமிஷன்கன் மூலம் தம்மை வளமாக்கிக் கொண்டனர். கஷ்டப்படும் மக்களுக்கு இது வேதனையை அதிகரித்தது. ஆனால் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளதும் அரசியல் வாதிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் மட்டும் சுகபோகங்களை அனுபவித்தனர்.
இந்த இனவாத யுத்தம் எல்லா வகையினரையும் நாட்டுக்குள் கொண்டு வந்தது. உதாரணத்துக்கு இலங்கை அரசியலில் இந்தியா தலையிட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஜே.ஆரின் குரல் வளையை நசுக்கி அதற்குள் 13வது அரசியல்யாப்பு திருத்த யோசனைகளை முன்வைத்தார். அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் இந்தியாவில் தலையீடு இலங்கை அரசியலில் எல்லை மீறியது. இலங்கை அரசியல்வாதிகள் அடிக்கடி இந்திய தலைநகர் புதுடில்லி சென்று விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உள்ளுர் விடயங்களுக்கு கூட இந்தியாவின் ஆசீர்வாதம் இலங்கை அரசியலவாதிகளுக்கு தேவை என்ற நிலை உருவாக்கப்பட்டது.
சகல சமூகங்களையும் சேர்ந்த பெறுமதி மிக்க மக்கள் அமைதியை நாடி உலகம் முழுவதும் பரவலாக குடிபெயரத் தொடங்கினர். சிங்கள பேரினவாதம் தமிழ் ஆயத பயங்கரவாதம் என்பனவற்றுக்கு இடையில் சிக்கிய முஸ்லிம் சமூகமும் இந்த வேதனைகளில் கணிசமான பங்கினைக் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை அரசுகளைப் பொறுத்தமட்டில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டது.
முஸ்லிம்களில் கிழக்கை சேர்ந்த ஒரு பகுதியினர் தமக்கென புறம்பான ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினர். இது முஸ்லிம் சமூகத்தை சிங்கள மற்றும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியது. முஸ்லிம்களுக்கு எதிரான ராஜபக்ஷ அரசின் கெடுபிடிகள் யுத்தம் முடிந்த பின்னரும் தொடர்ந்ததால் அவர்களின் துயரத்துக்கு முடிவு கிடைக்கவில்லை.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையானது இனவாத அரசியலின் மோசமான விளைவுகளை ஒரு பாடமாகக் கற்றுக் கொள்ள ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை அளித்தது. அதனால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக் கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பததை அளித்தது. இணங்களை ஒன்றினைத்து சிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது.
ஆனால் இந்த அரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த சந்தர்ப்பம் இன வாத அரசியல் சிந்தனைகளால் தொடர்ந்து இழக்கப்பட்டது. நாட்டில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு குற்றமும் மோசடியும் வீண்விரயமும் தலைவிரித்தாடி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாடு நிலை குலைந்தது. மகிந்த அரசு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வன்முறைகளைக் கட்விழ்த்து விட்டது. பள்ளிவாசல்கள், சமயப் பாடசாலைகள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் என்பனவற்றின் மீது 350க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளளன. அளுத்கமை, பேருவளை, தர்காநகர் சம்பவங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றன.
இவ்வாறானதோர் பின்னணியில்தான் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் குற்றங்களையும் மோசடிகளையும் ஒழிப்போம், நல்லாட்சிக்கும் இன நல்லுறவுக்கும் வழியமைப்போம் என்ற சுலோகங்களுடன் மக்கள் மத்தியில் வலம் வந்தனர்.
அவ்வாறு கூறி பதவிக்கு வந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? இனவாத அரசியல், பரவலான ஊழல், சட்டமின்மை, ஜனநாயத்தின் துரிதமான அழிவு, வீண் விரயம் ஆடம்பரம் அநியாயம் இவை எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டனவா?
இரு கட்சிகளினதும் மோசமான நிர்வாகம் காரணமாக இந்தியா, சீனா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா என எல்லோருமே புகுந்து விளையாடும் ஒரு ஆடு களமாக இலங்கை மாறியுள்ளது. எல்லோருமே தத்தமது வடிவமைப்புக்களையும் கட்டமைப்புக்களையும் இங்கே ஸ்தாபிக்க விளைகின்றனர்.
இன்றைய நிலையை கள்வர் கூட்ட ஆட்சி என பத்தி எழுத்தாளர் லுசிலி டி சில்வா வர்ணித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் நாம் இதே கூட்டத்துக்கு தானா மீண்டும் வாக்களிக்கப் போகின்றோம். நாட்டின் கௌரவத்தை நிலைநிறுத்தக் கூடிய ஒரு மூன்றாவது சக்தி பற்றி ஏன் நாம் யோசிக்கக் கூடாது.
Advertisements