யார் முனாபிக்? நயவஞ்சகத்தனம் எப்போது வெளிப்படும்?

From an email friend
சுபஹானல்லாஹ், முஃமீன்களையும் முனாபிக்களையும் போர்க்களம்தான் வேறுபிரித்துக் காட்டுகின்றது. ஒரு சுமூகமான சூழலில் யார் முனாபிக், யார் முஃமீன் என்பதை அறிந்துகொள்ள முடியாது. நயவஞ்சகர்கள் எங்கே வேண்டுமானாலும் இருப்பார்கள்.
முனாபிக்கள் உங்களுடன் முதல் வரிசையில் தொழுபவராக கூட இருக்கலாம்,உங்கள் பள்ளிவாசல்களில் குத்பா நிகழ்த்துபவராகக் கூட இருக்கலாம். நீங்கள் மார்க்க விடயம் சம்பந்தமாக கேள்விகள் கேட்டு உங்களுக்கு பதிலளிக்கின்ற மௌலவி, ஆலிம், அறிஞர், முல்லாவாகக் கூட முனாபிக் இருக்கலாம்.

யார் உண்மையான முஃமின், யார் முனாபிக் என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியாது. ஒரு யுத்த களம் தான் இதனை பிரித்துக்காட்டக் கூடியது. யுத்தத்தின் கடினமான சூழல்தான் முனாபிக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும்.
முஃமீன்களும் முனாபிக்களும் இரண்டறக் கலந்துள்ள நிலையில் முஃமீன்களை முனாபிக்குகளிடம் இருந்து வேறு பிரித்துக் காட்டுவதாக அல்லாஹ் அல்குர்ஆனில் (3:179) கூறுகின்றான். உகது யுத்தத்தின் போதே இந்த வசனம் அருளப்பட்டது.
அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பேரிலேயே உகதில் இரண்டு படைகளும் சந்தித்துக் கொண்டன. அந்த சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் முனாபிக்களை முஃமின்களிடமிருந்து வேறுபிரித்துக் காட்டினான். “அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள், இந்த மார்க்கத்தை பாதுகாத்து நிலைதிறுத்த வாருங்கள்” என் அவர்களிடம் சொல்லப்பட்ட போது “உண்மையில் இவ்வாறான ஒரு யுத்தம் நடை பெறும் என்று தெரிந்திருந்தால் நாங்களும் உங்களைப் பின் தொடர்ந்திருப்போம்” என முனாபிக்களின் தலைவன் அப்துல்லா இப்னு உபை கூறினான். உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயால் ஒன்றைக் கூறியதன் மூலம் அந்த நயவஞ்சகர்கள் இறை மறுப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கறிந்தவன் (பார்க்க 3:166-167). போர் நடைபெறப் போகின்றது என்று தெரிந்திருந்தும் உஹத் களத்தை விட்டு தனது கூட்டத்தாருடன் அப்துல்லா இப்னு உபை வெளியேறி இருந்தான். தமது நாவினால் சொன்னதற்கு முற்றிலும் மாற்றமாகவே அவர்கள் நடந்து கொண்டனர். இஸ்லாத்தின் மூலம் கிடைக்கின்ற உலக ஆதாயங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டன, ஆனால் அதற்கான முயற்சிகளை செய்ய அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை. முனாபிக்கள் எந்தவித துன்பமும் அநுபவிக்காமல் பலன்களை அநுபவிக்க நாடினார்கள். யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் கனீமத்களுக்கு ஆசைப்பட்டனர்.
வசதியாக இருக்கின்ற போது, தேவைகள் நிறைவேறுகின்ற போது முஸ்லிமாக இருப்பதும், கஷ்டம், சோதனை என்று வருகின்ற போது மார்க்கத்தை விட்டுத் தூரமாகுவதும் நயவஞ்சகர்களின் பண்புகளாகும். இதனை அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பத்தில் காணலாம். ஈமானிற்கு இது மிக ஆபத்தானது. உங்களையும் ஒரு முறை உரசிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏதாவது உலக ஆதாயம் கிடைக்கும் எனபதற்காக ஒரு குழுவில் இணைந்து கொள்வதும் சோதனை/போராட்டம் என்று வருகின்ற போது குழுவை விட்டு ஒதுங்குவது, உதாரணமாக பல பெற்றோர்கள் குழந்தைகள் தங்களை மதிக்க வேண்டும், பெற்றோரின் பிள்ளைகள் மீதான உரிமை அல்லாஹ்விற்கு அடுத்த படியாக உள்ளது, பெற்றோருக்கு அட பணிய வேண்டும் என்பன போன்ற அல்குர்ஆன் வசனங்களை பார்க்கின்ற போது அதிக சந்தோசப்படுவதும் அதே இளைஞர்களை அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய அல்குர்ஆன் பணிக்கின்ற போது அந்த வசனங்கள் பெற்றோருக்கு பிடிப்பதில்லை. அந்த வசனங்களை தமது குழந்தைகள் கேட்பதிலிருந்தும் தூரமாக்கி விடுகின்றனர்.
கணவன், மனைவி பற்றி வருபவற்றில் இன்னொருவருக்கு சுஜூது செய்ய அநுமதித்திருந்தால் கணவன்களுக்கு சுஜூது செய்யுமாறு மனைவியரை பணித்திருப்பேன் என்ற வசனம், கணவன் அழைத்து செல்லாத பெண்ணை விடியும் வரை மலக்குகள் சபிக்கின்றனர் போன்ற வசனங்களை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் மொழிகின்ற கணவன்மார் “மனைவிக்கு சிறந்தவரே உங்களில் சிறந்தவர், மனைவியுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள், நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் மனைவியருடன் நடந்து கொண்ட அழகிய முறைகள் பற்றி வருகின்ற போது அவற்றை புறக்கணித்தல்.
சில உலமாக்களை எடுத்துக் கொண்டால் உலமாக்களை எவ்வாறு மதிக்க வேண்டும், அவர்களுடன் விவாதம் புரியக் கூடாது, பத்வாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன பற்றி கூறுகின்ற அதே உலமாக்கள்தான் இஸ்லாம் பற்றி முழுமையாக பேச வேண்டும், எதையும் மறைக்கக்கூடாது, உயிர் போகக்கூடிய சந்தர்ப்பம் வந்தாலும் உண்மையையே உரைக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் வருகின்ற போது ஓடி ஒழிந்து கொள்கின்றனர்.
நல்லது நடக்கும் போது இஸ்லாத்தில் இருப்பதும் கெட்டது நடக்கலாம் என்று தெரிந்து விலகிக் கொள்வதுமான இந்த இரட்டைத் தன்மை மிகக் கெட்டதாகும். விருப்பமான பகுதியைக் கூறி வெறுப்பான பகுதியை மறைப்பது மிகவும் ஆபத்தானது. இது ஒரு மனிதனை நவஞ்சகத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது.
இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள் (2:208) என அல்லாஹ் கூறுகின்றான். வசதி என்று கருதுகின்ற பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிடிக்காத பகுதியை விட்டுவடுவது வேதக்காரர்களின் பண்பு. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரித் தோழர்களிடமிருந்து உடன்படிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் போது “கஷ்டமான தருணத்திலும் இலகுவான தருணத்திலும் முற்றிலும் கட்டுப்படுவோம்” என்றே பையத் ஐப் பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் விரும்புகின்ற போது ஏற்றுக்கொள்ளவும் வெறுக்கின்ற போது விட்டுவிடுவும் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கத்தை முழுமையாக எல்லா சந்தர்ப்பத்திலும் பின்பற்ற வேண்டும்.
இமாம் அன்வர்
Advertisements